உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் ஓட்டுச்சாவடி முகவர்கள் முதல் கட்ட பயிற்சி 1548 பேர் பங்கேற்பு

பரமக்குடியில் ஓட்டுச்சாவடி முகவர்கள் முதல் கட்ட பயிற்சி 1548 பேர் பங்கேற்பு

பரமக்குடி : ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பரமக்குடி (தனி) சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பங்கேற்க உள்ள ஓட்டுச்சாவடி முகவர்களின் முதல் கட்ட பயிற்சி முகாம் ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.லோக்சபா தேர்தல் ஏப்.19ல் நடக்க உள்ளது. பரமக்குடி சட்டசபையில் 303 ஓட்டுச் சாவடிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் உட்பட நான்கு நிலைகளில் 1212 பேர் பணியாற்ற உள்ளனர்.மேலும் 20 சதவீதம் அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்ட நிலையில் மொத்தம் 1548 பேர் நேற்று பயிற்சியில் கலந்து கொண்டனர்.இதில் கலெக்டர் விஷ்ணு சந்திரன், பரமக்குடி சப் கலெக்டர் அபிலாஷா கவுர், தாசில்தார் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ