இலங்கையில் 2 மீனவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ராமேஸ்வரம்,:டிச.,24ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் 14 மீனவர்கள் அபராதத்துடன் விடுவிக்கப்பட்டனர்.ஒரு மீனவர் 2வது முறையாக கைதானதால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.மற்ற இருவரான ரோகன் சியான் 53, முனியாண்டி 59, ஆகியோரது கைவிரல் ரேகை பதிவில் குழப்பம் ஏற்பட்டதால் இருவருக்கும் தீர்ப்பை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.நேற்று இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் (இந்திய மதிப்பில் ரூ. 14,500) அபராதம் விதிக்கப்பட்டது. தொகை செலுத்தத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.