உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் பார்வையிழப்பு ராமநாதபுரம் எய்ம்ஸ் டாக்டர் தகவல்

இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் பார்வையிழப்பு ராமநாதபுரம் எய்ம்ஸ் டாக்டர் தகவல்

ராமநாதபுரம்:''இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் கருவிழி பாதிப்பால் பார்வையை இழப்பதாக'' ராமநாதபுரம் எய்ம்ஸ் மருத்துவனை கண்மருத்துவத்துறை தலைவர் டாக்டர் ஏ.என்.ராஜா தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் நடந்த கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:இந்தியாவில் கண் பார்வை இழப்போரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கண்புரை நோய், கண் நீர் அழுத்த நோய், சர்க்கரை நோயால் விழித்திரை பாதிப்பு, கருவிழி பாதிப்பு நோய் ஆகியவை கண்பார்வை இழப்புக்கு முக்கிய காரணங்களாகும். கண் கருவிழி பாதிப்பானது நுண்ணுயிர் தாக்குதல், கண்ணில் காயம் ஏற்படுதல், மரபியல் நோய்கள், வைட்டமின் ஏ குறைபாடால் சிறுவர்கள், பெரியவர்களுக்கும் கண்பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது.இந்தியாவில் ஆண்டுக்கு 1.5 முதல் 2 மில்லியன் மக்கள் ( 20 லட்சம் பேர்) கருவிழி பாதிப்பால் பார்வையை இழக்கின்றனர். கண் தானம் செய்வதால் அவர்களுக்கு வாழ்வு அளிக்க முடியும். மண்ணுக்குள் வீணாகும் கண்களை மற்றவர்களுக்கு தானம் செய்வது பெரிய கொடையாகும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி