உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கள்ளப்படகில் இலங்கை செல்ல முயன்ற கணவன், மனைவி உள்ளிட்ட 7 பேர் கைது

கள்ளப்படகில் இலங்கை செல்ல முயன்ற கணவன், மனைவி உள்ளிட்ட 7 பேர் கைது

ராமேஸ்வரம்:- ராமேஸ்வரம் அருகே கள்ளப்படகில் இலங்கை செல்ல முயன்ற அகதிகளான கணவன், மனைவி, ஏஜன்டுகள் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.இலங்கை வவுனியா வை சேர்ந்த ராஜேஸ்வரன் 52; இவரது பக்கவாத நோயை குணப்படுத்த 2017ல் மனைவி சாந்தி 47, உடன் விமானம் மூலம் சென்னை வந்தார். இங்கு சிகிச்சை பெற்ற நிலையில் சென்னை அருகே இலங்கை அகதிகள் முகாமில் உள்ள உறவினர்களுடன் தங்கினர்.ஏழு ஆண்டுகள் ஆகியும் மீண்டும் இலங்கை செல்லாமல் இருந்ததால் 'விசா' ரத்தானது. இதனை புதுப்பிக்க ரூ.3 லட்சம் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கள்ளப்படகில் இலங்கை செல்ல முடிவு செய்து சென்னை ஏஜன்ட் வினோத்குமார் 40, என்பவரை அணுகினர்.இதற்கு கூலி ரூ.30 ஆயிரம் பேசிய நிலையில் ராமேஸ்வரம் அருகே வேதாளையை சேர்ந்த படகு ஏஜன்டுகள் சைபுல்லா 44, நவீத் இம்ரான் 24, நைனா முகமது 37, லுத்துப்பர் ரகுமான் 24, ஆகியோரிடம் வினோத்குமார் பேசி கணவன், மனைவியை ராமேஸ்வரம் அழைத்து வந்துள்ளார்.இவர்கள் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு என்ற இடத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்தனர். இதனையறிந்த தங்கச்சிமடம் போலீசார் 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை