மேலும் செய்திகள்
பெருமாள் கோயிலில் ஏகாதசி
9 hour(s) ago
அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
9 hour(s) ago
கோயிலில் 1008 சங்காபிேஷகம்
9 hour(s) ago
பரமக்குடியில் போலீசார் நல்லுறவு கூட்டம்
9 hour(s) ago
பரமக்குடி : -பரமக்குடி சுற்று வட்டார குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக திரிவதால் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.பரமக்குடி நகராட்சி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் அவ்வப்போது குரங்குகள் நடமாட்டம் உள்ளது. கடந்த சில நாட்களாக பரமக்குடி அருகே வேந்தோணி, ஐ.டி.ஐ., மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் குரங்குகள் குட்டிகளுடன் குடும்பமாக திரிகின்றன.இதனால் தெருக்களில் செல்லும் குழந்தைகள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் காய்கறிகள், பழங்கள் என உணவு பொருட்களை கொண்டு செல்வோரிடம் இருந்து குரங்குகள் பறித்துச் செல்வதால் அச்சமடைந்துள்ளனர்.வீடுகளின் பால்கனிகளில் அமர்ந்து உணவு பொருட்களை தேடி வருவதால் அப்பகுதி மக்கள் திகைப்பில் உள்ளனர். குரங்குகள் குட்டிகளுடன் வலம் வருவதால் அவற்றை பாதுகாக்கும் நோக்கில் மிகுந்த ஆக்ரோஷத்துடன் உள்ளன.எனவே ஒவ்வொரு நாளும் இடம் பெயரும் குரங்கு கூட்டத்தை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து அவற்றை உரிய இடங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago