மேலும் செய்திகள்
தேங்கிய மழைநீர்: மாணவர்கள் அச்சம்
7 hour(s) ago
இலவச மருத்துவ முகாம்
7 hour(s) ago
கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி
7 hour(s) ago
இன்று புதிய வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
7 hour(s) ago
கீழக்கரை : கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி மேல வலசை பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. இவற்றில் வித்தியாசமாக மரத்தில் காணப்படும் கிளைகளைப் போல ஒரு தென்னை மரத்தில் இரண்டாகப் பிரிந்து அவற்றில் இருந்து மேலும் இரண்டு கிளைகளாக மரத்தை போல் பிரிந்து காணப்படும் அதிசய தென்னை மரம் உள்ளது. காஞ்சிரங்குடி அருகே மேலவலசையை சேர்ந்தவர் பீர்முகமது 80. இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. அவற்றில் 40 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட இந்த மரத்தில் ஆரம்பத்தில் சாதாரண மரம் போல் வளர்ந்தது. பின்னர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் வளர்ச்சியில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டது. மற்ற தென்னை மரங்களை காட்டிலும் வித்தியாசமாக வடிவமைப்புடன் காணப்படும் மரத்தை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர். தென்னை விவசாயிகள் கூறியதாவது: லட்சத்தில் இது போன்ற ஒரு மரம் வருவது அபூர்வமானது. இதில் மரபணு மாற்றம் ஏற்பட்டதால் இது போன்று சாதாரண மர கிளைகளைப் போல் வளர்ந்துள்ளது. இது குறித்து வேளாண் அறிவியல் மையத்தினர் ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago