வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திடீரென உருவான மணல் திட்டுகள் நகரும் தண்மை உடையவை. மக்களை இதில் செல்லாமல் கவனித்துக்கொள்ளவேண்டும். பெரிய உயராமல் கடல் அலைகள் மணல் திட்டைகளை கபளீகரம் பண்ணலாம் .
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு உருவான மணல் திட்டில் நின்று சுற்றுலாப்பயணிகள் கடல் அலைகளை கண்டு ரசித்தனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று புயலில் இடிந்த கட்டடங்கள், கடல் அலைகளை கண்டு ரசிக்கின்றனர். இதனால் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால் தனுஷ்கோடி தென் கடலான மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுகின்றன. இச்சூழலில் அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா வடக்கு பகுதியில் திடீரென 200 மீ., சுற்றளவில் மணல் திட்டு உருவாகியுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் நின்றபடி கடல் அழகை ரசித்து ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்.பருவ கால மாற்றத்திற்கு ஏற்ப ஆண்டுக்கு ஒருமுறை இது போன்ற மணல் திட்டுகள் உருவாகும். ஆனால் அரிச்சல்முனை வடக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மணல் திட்டு உருவாகியுள்ளது என தனுஷ்கோடி மீனவர் உமையவேல் தெரிவித்தார்.
திடீரென உருவான மணல் திட்டுகள் நகரும் தண்மை உடையவை. மக்களை இதில் செல்லாமல் கவனித்துக்கொள்ளவேண்டும். பெரிய உயராமல் கடல் அலைகள் மணல் திட்டைகளை கபளீகரம் பண்ணலாம் .