உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்

திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீரனுார் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் கட்டடம் கட்டி முடித்து கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.கீரனூர் மேலபண்ணைக்குளம். கீழபண்ணைக்குளம், ஆத்திகுளம் உட்பட 10 மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமங்களில் முதலுதவி சிகிச்சைக்காகவும், கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைக்காகவும் 15 கி.மீ., தொலைவில் உள்ள மேலக்கொடுமலுார் ஆரம்ப துணை சுகாதார நிலையம் சென்று வருகின்றனர். இதனால் வீண்அலைச்சல், பஸ் வசதி இல்லாத கிராமங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கிராமமக்களின் கோரிக்கையை ஏற்று 2021 -22ம் நிதி ஆண்டில் 15வது நிதிக்குழு மாநியத்தில் ரூ.30 லட்சத்தில் கீரனுாரில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. கடந்த 6 மாதத்திற்கு மேலாக திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே துணை சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை