உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது

பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது

ராமேஸ்வரம்: -வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால்ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.ஆந்திரா வடக்கு, ஒடிசா தெற்கு கடற்கரையில் தொலைவில் வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழககடலோர பகுதியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது.இந்த தொலைதுார புயல் சின்னத்தால் நேற்று பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் ஆழ்கடலில் எச்சரிக்கையுடன் மீன்பிடித்து கரை திரும்பவும், கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க மீன்துறையினர் அறிவுறுத்தினர்.இதற்கிடையே நேற்று ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !