உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடியில் ஆவின் பால் சப்ளை

சாயல்குடியில் ஆவின் பால் சப்ளை

சாயல்குடி:சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட் ஆவின் பாலகத்தில் காலை நேரங்களில் ஆவின் பால் கேட்டால் டெலிவரி கிடைப்பதில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆவின் பாலகத்தில் பொதுமக்கள் எதிர்பார்த்த அளவில் விற்பனைக்காக ஆவின் பால் பாக்கெட்டுகள் பல்வேறு அளவுகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.கடைக்காரர் வீரபாண்டி கூறுகையில், சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் ஆவின் பால் விற்பனையகம் தனியாக கடை அமைந்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் தங்கு தடையின்றி எல்லா நேரத்திலும் பால் பாக்கெட்டுகளை வாங்கி செல்லலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை