உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மனுக்கு அபிஷேகம்

ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மனுக்கு அபிஷேகம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குடம் மற்றும் பூச்சொரிதல் விழா ஜூலை 30ல் நடக்கிறது.விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கோயிலில் யாகசாலை பூஜையுடன் காப்பு கட்டுதல் நடந்து விழா துவங்கியது. விழாவின் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான நேற்று மூலவர் அம்மனுக்கு 18 வகை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மேலும் கோயிலில் முளைப்பாரி வளர்க்கும் நிகழ்வில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விரதத்தை துவங்கிய பக்தர்கள் கோயிலில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ