உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தலைமறைவானவர் ஆஜராக உத்தரவு

தலைமறைவானவர் ஆஜராக உத்தரவு

திருவாடானை : போக்சோ வழக்கில் 9 ஆண்டுகளாக தலைமறைவானவர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.ஆர்.எஸ்.மங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் ைஹதர் அலி. 2016ல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் போக்சோவில் ைஹதர்அலி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடக்கிறது. ஜாமினில் சென்ற ைஹதர்அலியை தவிர மற்றவர்கள் வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகி விடுதலை ஆகியுள்ளனர். இந்த வழக்கின் 5வது நபரான ைஹதர்அலிக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கபட்டும், போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே ஏப்.4 ல் ைஹதர்அலி ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி கவிதா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை