உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அஞ்சலகங்களில் விபத்து  காப்பீடு பதிவு வாரம்

அஞ்சலகங்களில் விபத்து  காப்பீடு பதிவு வாரம்

ராமநாதபுரம்; இந்திய அஞ்சல் துறை, போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி இணைந்து நடத்தும் விபத்து காப்பீடு பதிவு வாரம் சிறப்பு முகாம் பிப்.24 முதல் 28 வரை அஞ்சலகங்களில் நடக்கிறது. இத்திட்டத்தில் 18 முதல் 65 வயதிற்கு உட்பட்ட அனைவரும் தங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆவணங்களாக ஆதார் எண், அலைபேசி எண், வாரிசுதாரரின் விபரங்களை கொண்டு வர வேண்டும். ரூ.320க்கு ரூ.5 லட்சம் காப்பீடு, ரூ.559க்கு ரூ.10 லட்சம், ரூ.799க்கு ரூ.15 லட்சம் என்ற திட்டங்களில் இணையலாம்.அஞ்சல்துறையுடன் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் பல தனியார் நிறுவனங்களுடன் இணைந்து டூவீலர், நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு, உடல் நல காப்பீட்டை வழங்குகிறது. சிறப்பு முகாம் மற்றும் தபால்காரர்கள் மூலம் இத்திட்டங்களில் சேரலாம்.மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை