உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் பாலம் அருகே விபத்து

பாம்பன் பாலம் அருகே விபத்து

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே அரசு பஸ், லாரி மோதியதில் லாரி டிரைவர் உயிரிழந்தார்.நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சை டிரைவர் ஆசைதம்பி 46, ஓட்டி சென்றார். பஸ் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் மேற்கு நுழைவை கடந்து சென்ற போது, எதிரே ராமேஸ்வரம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி வலது புறமாக சென்று அரசு பஸ் மீது மோதியது.இதில் பஸ், லாரி முன் பகுதிகள் பலத்த சேதமடைந்தன. ராமேஸ்வரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம் 47, உயிரிழந்தார்.அரசு பஸ் டிரைவர், நடத்துனருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண்டபம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ