உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வெளி மாநில ஆம்னி  பஸ் இயக்கினால் நடவடிக்கை

வெளி மாநில ஆம்னி  பஸ் இயக்கினால் நடவடிக்கை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் ேஷக் முகமது தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழகத்தில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஆம்னி பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளி மாநில ஆம்னி பஸ்கள் இன்று (ஜூன் 18)முதல் இயக்கக் கூடாது என அரசு தடை விதித்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் பஸ்கள் அனுமதிக்கப்படும்.அதே நேரத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கினால் அது குறித்து ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பஸ்சை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் தமிழக பதிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வெளி மாநில ஆம்னி பஸ்கள் இயக்குவதற்கு வாய்ப்பில்லை. அப்படியே இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை