உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குறைகளை நிவர்த்தி செய்யுங்க செவல்பட்டி மக்கள் குமுறல்

குறைகளை நிவர்த்தி செய்யுங்க செவல்பட்டி மக்கள் குமுறல்

சாயல்குடி: சாயல்குடியில் இருந்து 12 கி.மீ.,ல் உள்ள செவல்பட்டி ஊராட்சி மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுகோள் விடுத்தனர்.கடலாடி ஒன்றியம் செவல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாலம்பட்டி, முத்துராமலிங்கபுரம், செவல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மூன்று மாதங்களாக தெருக்களில் காவிரி குடிநீர் விநியோகம் இல்லை. குடம் ரூ.10 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். செவல்பட்டி மக்கள் கூறியதாவது:இப்பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக விநியோகம் இல்லை. ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருள்கள் இல்லாததால் தொடர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர். தெருக்களில் குப்பை தொட்டிகள் கூடுதலாக வைக்க வேண்டும்.இளைஞர்களுக்கு முறையான உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம் இதுவரை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அமைக்கவில்லை. பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கடலாடி பி.டி.ஓ.,விடம் அளித்துள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !