அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்பு குழு ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்பு குழு சார்பில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவிற்கு டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தர்மர் எம்.பி., தலைமை வகித்தார். அவைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை துவங்கி 3 ஆண்டுகளாகியும் இதுவரை தலைக்காய சிகிச்சை பிரிவில் டாக்டர் இன்றி. தலையில் காயம்ஏற்படும் நபர்களை மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் இறக்கின்றனர். இப்பிரச்னையை கண்டுகொள்ளாத தி.மு.க., அரசை கண்டித்தும். விரைவில் டாக்டர்கள், அலுவலக பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.