உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

ராமேஸ்வரம் : தங்கச்சிமடம் ஊராட்சியில் 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு அவசர கால மருத்துவ சேவைக்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது. இதனை தவிர்க்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ்சை அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் நேற்று தங்கச்சிமடத்தில் அர்ப்பணிப்பு விழா நடந்தது. இதில் தங்கச்சிமடம் தவ்ஹீத் ஜமாத் தலைவர் அஜ்மல்கான், செயலாளர் சிக்கந்தர், பொருளாளர் சாகுல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ