உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஈஸ்வரன் கோயிலில் வருடாபிஷேக விழா

ஈஸ்வரன் கோயிலில் வருடாபிஷேக விழா

பரமக்குடி, : பரமக்குடி விசாலாட்சி அம்பிகா, சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் கோயிலில் 2021 ஜூன் 28ல் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று வருடாபிஷேக பூர்த்தியை முன்னிட்டுகாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தது. மூலவர் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்பிகாவுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்து அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது. பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலை கருணைபுரி கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்டத்தினரின், தேவார திருவாசக பதிகங்கள் பண்ணிசை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ