உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் மனு தாக்கல்

பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் மனு தாக்கல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் நேற்று எம்.பன்னீர்செல்வம் என்பவர் மனு தாக்கல் செய்தார்.ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவரை வீழ்த்துவதற்காக எதிர்கட்சிகள் ஏற்பாட்டில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் நேற்று முன்தினம் வரை 4 பேர் மனு தாக்கல் செய்தனர்.இந்நிலையில், நேற்று மதியம் 2:50 மணிக்கு பரமக்குடி அருகே கங்கை கொண்டானை சேர்ந்த எம்.பன்னீர்செல்வம் 72, சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட அவரது பெயரில் 6 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. நாளை (மார்ச் 29) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். அதன் பிறகு மார்ச் 30ல் எத்தனை பன்னீர்செல்வம் போட்டியிட உள்ளனர் என்பது தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ