உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரி மாணவர்களுக்கு  கலைப்பயிற்சி வகுப்புகள் 

கல்லுாரி மாணவர்களுக்கு  கலைப்பயிற்சி வகுப்புகள் 

ராமநாதபுரம் : தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கு 27 இடங்களில் கலைப்பயிற்சி முகாம் ஜூலை 12 முதல் துவங்கப்படவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பகுதி நேர கலைப்பயிற்சி முகாம் அரசு இசைப்பள்ளியில் நடைபெற உள்ளது. கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் பகுதிநேரமாக கலைப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.இதற்கு வயது தடையில்லை, குறைந்தபட்சம் 17 வயது முதல் பயிற்சியில் பங்கேற்கலாம்.ஆண்டுக்கு ரூ.500 கட்டணத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் கரகாட்டம், ஒயிலாட்டம், கிராமிய பாடல், சிலம்பம், ஆகிய கலைகளை வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மாலை 4:00 முதல் 6:00 மணிவரை பயிற்சி வழங்கப்படும்.கலைப்பயிற்சி முகாம் படிக்கும் நபர்கள் கல்லுாரியிகளில் பகுதி நேர ஆசிரி யராக பணிபுரியலாம். அதற்கான வாய்ப்புகளை கலைப்பண்பாட்டுத்துறை உருவாக்கி வருகிறது. ஓராண்டு பயிற்சிக்குப்பின் தேர்வு நடத்தி பல்கலை சான்றிதழ் வழங்கப்படும், என மதுரை கலைப்பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு மேற்பார்வையாளர் லோகசுப்பிரமணியன் 98425 67308 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை