உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெண்கள், குழந்தைகள் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

பெண்கள், குழந்தைகள் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உரிமைகள் குழு தொடக்க விழா, பெண்கள், குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.கல்லுாரியின் தாளளார் தேவ மனோகரன் மார்ட்டின் துவக்கி வைத்து பேசினார். முதல்வர் ஆனந்த் வாழ்த்தி பேசினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், குழந்தைகள், பெண்கள் உரிமைக்குழுவின் செயல்பாடுகள், பொறுப்புகள் குறித்து பேசினார்.குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நன்னடத்தை அலுவலர் ஜோசியா சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகளுக்கான மறுவாழ்வு பற்றியும், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பூமிநாதன் தத்தெடுப்பு முறை, குழந்தை தொழிலாளர்கள் பற்றியும், குழந்தைகள் நலக்குழுவின் உறுப்பினர் தேன்மொழி குழந்தைகள் நலக்குழுவின் செயல்பாடுகள், பொறுப்புகள் குறித்தும் பேசினர்.சட்டம் சார்ந்து நன்னடத்தை அலுவலர் குரூப்ஸ்கயா போக்சோ, குழந்தை திருமணம் உள்ளிட்ட சட்டங்கள் பற்றி பேசினார். குழந்தைகள் மற்றும் பெண்கள் உரிமைக்குழுவில் இணைந்த கல்லுாரி மாணவிகளுக்கு பேட்ஜ்களை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் வழங்கினார்.கல்லுாரி குழந்தைகள் பெண்கள் உரிமைக்குழுவின் கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் நன்றி கூறினார். இணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி