உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பா.ஜ., நிர்வாகி தலைமறைவு போலீசில் ஆஜராக நோட்டீஸ்   

பா.ஜ., நிர்வாகி தலைமறைவு போலீசில் ஆஜராக நோட்டீஸ்   

தொண்டி: முகநுாலில் மத அவதுாறு பதிவேற்றம் செய்து தலைமறைவான பா.ஜ., மாநில நிர்வாகி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்று அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.தொண்டியை சேர்ந்தவர் அகமது பாய்ஸ் 47. இவர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்தவர் குருஜி 35. இவர் பா.ஜ., ஆன்மிக பிரிவு மாநில பொறுப்பாளராக உள்ளார். இவர் ஹிந்து, முஸ்லிம்கள் இடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் முகநுாலில் கருத்துகளை வெளியிட்டுள்ளார். சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் குருஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். குருஜி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நீதமன்ற உத்தரவுப்படி தொண்டி போலீசார் குருஜி மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் கூறுகையில், பாரதிய குடிமக்கள் சட்டம் 35(3) ன் கீழ் வழங்கபட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் விதமாக தலைமறைவான குருஜி வீட்டில் ஜூலை 2 காலை 10:00 மணிக்கு தொண்டி போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் அவர் அன்றைய தினம் ஆஜராகததால் அவரை தேடி வருகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ