உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊராட்சிகளில் மயானங்கள் பராமரிக்கப்பட வேண்டும்

ஊராட்சிகளில் மயானங்கள் பராமரிக்கப்பட வேண்டும்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி மற்றும் கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 93 கிராம ஊராட்சிகளிலும் அரசுக்கு சொந்தமான இடத்தில் மயானம் மற்றும் இடுகாடு உள்ளது.இந்நிலையில் பல ஊராட்சிகளில் உள்ள இடுகாடுகளில் இறுதிச் சடங்கு செய்வதற்கான தண்ணீர் வசதி இன்றி உள்ளது. உடல்களை அடக்கம் செய்ய மற்றும் எரிப்பதற்குரிய இடங்கள் பெரும்பாலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து பராமரிப்பின்றி உள்ளது.இடுகாடு உள்ள தகன மேடையில் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் திறந்தவெளியில் அடக்கம் செய்யும் அவல நிலையும் தொடர்கிறது. கிராம மக்கள் கூறியதாவது:தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து மயானப் பாதை செல்லும் இடங்களை சீரமைக்கவும், காம்பவுண்டு சுவர் இல்லாத இடங்களில் கட்டவும், இறுதிச் சடங்கில் ஈடுபடுவோர் அமர்வதற்கான காத்திருப்பு கூடங்கள் உள்ளிட்டவைகளை கட்டித்தர வேண்டும். குறிப்பாக புழக்கத்திற்கான தண்ணீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட நிர்வாகம் ஊராட்சிகளில் உள்ள பராமரிப்பில்லாத இடுகாடுகளை முறையாக பராமரிப்பு செய்வதற்கு தனி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை