உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ பெருவிழா; மே 21ல் பெரிய தேரோட்டம்

பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ பெருவிழா; மே 21ல் பெரிய தேரோட்டம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு தனி சன்னதி உள்ளது.புராண இதிகாசத்துடன் தொடர்புடைய திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ பெருவிழா கொண்டாடப்படுகிறது.மே 13 காலை 9:00 மணிக்கு பட்டாபிஷேக ராமர் சன்னதி முன்புறமுள்ள கொடி மரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து பத்து நாட்களும் காலையில் பல்லக்கு, இரவில் சிம்மம், அனுமார், கருடன், புன்னை வாகனம், சேஷ வாகனம், சூரண உத்ஸவம், கம்ச வாகனம் உள்ளிட்டவைகளில் வீதிவலம் நடக்கிறது.மே 18 இரவு யானை வாகனத்தில் திருக்கல்யாண உற்ஸவம் இரவு 7:00 மணி முதல் 8:00 மணிக்குள் நடக்கிறது. மே 21ல் பெரிய தேரோட்டத்தில் உற்ஸவ மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி