உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலத்தில் சாரல் மழை

ஆர்.எஸ்.மங்கலத்தில் சாரல் மழை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம், அதனை சுற்றுப்புற பகுதிகளான திருப்பாலைக்குடி, தேவிபட்டினம், சம்பை, சோழந்தூர், நாரணமங்கலம், இருதயபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், சாரல் மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி, எள், மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்கு சாரல் மழை ஏற்றதாக அமைந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதே நேரத்தில் கடற்கரையோர பகுதிகளில் மழையால், உப்பள பாத்திகளில் தண்ணீர் தேங்கியதால், உப்பளத் தொழில் பாதிப்படைந்ததாக உப்பள தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ