உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சர்ச்களில் நடந்த தேர் பவனி

சர்ச்களில் நடந்த தேர் பவனி

தொண்டி : தொண்டி அருகே சம்பை கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியார் சர்ச் திருவிழா மே 3 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் பாதிரியார் விக்டர் தலைமை வகித்தார். பாதிரியார்கள் கஸ்பார்ராஜா, அன்பரசன், சின்னப்பராஜ் மற்றும் சோலியக்குடி, காரங்காடு, திருவெற்றியூர் கிராம மக்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.*ஆர்.எஸ்.மங்கலம் அருகே சவேரியார்பட்டினம் புனித சவேரியார் சர்ச் விழா மே 3 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. விழாவின் கடைசி நாளில் சவேரியார் தேர்ப்பவனி விழா நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சவேரியார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய வீதிகளில் வந்த சவேரியாரை பெண்கள் தெருக்களில் மாக்கோலமிட்டு வரவேற்றனர். விழாவை முன்னிட்டு திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை