| ADDED : ஜூலை 29, 2024 10:36 PM
பரமக்குடி : பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள வள்ளை-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூன்றாம் ஆண்டு சத்ரு சம்ஹார ஹோமம் நடந்தது.விநாயகர், தண்டாயுதபாணி, சொர்ண ஆகர்ஷண பைரவர், நவக்கிரக சன்னதிகளுடன், சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்பாளிக்கிறார். இங்கு சத்ரு சம்ஹார ஹோம விழாக் குழுவினர் சார்பில் மூன்றாம் ஆண்டு விழா நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது.அனுக்ஞை, விநாயகர் பூஜை, வருண பூஜை, பஞ்சகவ்ய பூஜை, வேதிகார்ச்சனை மற்றும் வேல் அர்ச்சனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சத்ரு சம்ஹார அர்ச்சனை ஹோமம் நிறைவடைந்து மகாபூர்ணாஹூதி நடந்தது.மேலும் 11:30 மணிக்கு கடம் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் கோயிலை வலம் வந்தனர். தொடர்ந்து மகா திரவிய அபிஷேகம் மற்றும் கலச அபிஷேகங்கள் சுவாமிக்கு நிறைவடைந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் 'அரோகரா' கோஷம் முழங்க அபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.