உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிள்ளைகளிடம் சொத்தை பறிகொடுத்த பெற்றோருக்கு கலெக்டர் பண உதவி

பிள்ளைகளிடம் சொத்தை பறிகொடுத்த பெற்றோருக்கு கலெக்டர் பண உதவி

ராமநாதபுரம்:பிள்ளைகளிடம் இழந்த சொத்தை மீட்டுத்தரக்கோரி மனு அளிக்க வந்த வயதான கணவன் - மனைவிக்கு ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் 1000 ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்தார்.கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியைச் சேர்ந்தவர் கார்மேகம் 90. அவரது மனைவி பூச்செண்டு 70. இந்த தம்பதிக்கு 3 ஆண், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். சொத்துக்களை மகளுக்கு எழுதிக் கொடுத்துவிட்ட நிலையில் கவனிக்க ஆளின்றி சிரமப்படுகின்றனர். நேற்று முன் தினம், கலெக்டர் அலுவலகத்தில் கார்மேகம், பூச்செண்டு ஆகிய இருவரும் மனு அளிக்க வந்தனர். பூச்செண்டுவிடம் மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறிய கலெக்டர் விஷ்ணுசந்திரன் 1000 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பினார்.பூச்செண்டு கூறுகையில், “என் மகள் நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டார். எங்களுக்கு பணம் தரவில்லை. எங்களை கவனிக்கவில்லை. நிலத்தை மீட்டுத்தர கலெக்டர் உதவி செய்ய வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை