மேலும் செய்திகள்
2,409 ஓட்டு இயந்திரங்கள் பெங்களூரு சென்றன
24-Aug-2024
ராமநாதபுரம் : ராமநாதபுரம், முதுகுளத்துார், திருவாடனை, பரமக்குடி (தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். ராமநாதபுரம் வேளாண்மை வணிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அலுவலக வளாகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையிலும் ஆய்வு செய்தார்.ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், தேர்தல் தாசில்தார் முருகேசன், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
24-Aug-2024