உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இரவு நேரங்களில் மதுபான பாராக மாறி வரும்  கலெக்டர் அலுவலகம்; பாதுகாப்பு கேள்விக்குறி 

இரவு நேரங்களில் மதுபான பாராக மாறி வரும்  கலெக்டர் அலுவலகம்; பாதுகாப்பு கேள்விக்குறி 

ராமநாதபுரம், : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் மது பிரியர்களின் பாராக மாறி வருவதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தான் எஸ்.பி., அலுவலகம், டி.ஐ.ஜி., அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாவட்ட விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், பலவேறு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. கலெக்டர் அலுவலகத்திற்கு எப்போதும் மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்தப்பகுதியில் நடை பயிற்சி செல்பவர்களுக்கு நடை பாதையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் நடை பயிற்சி மேற்கொள்பவர்களும் உள்ளனர்.கலெக்டர் அலுவலக வளாகத்தை இரவு நேரங்களில் மது பிரியர்கள் தொடர்ந்து பாராக பயன்படுத்துகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலி மது பாட்டில்களும், மதுபானம் அருந்துவதற்கு பயன்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள் நிரம்பி வழிகின்றன.எந் நேரமும் மக்கள் வந்து செல்லும் இப்பகுதியில் இது போன்று மது பிரியர்கள் இரவு நேரங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. பெண்கள் இப்பகுதியில் நடமாடுவதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அசாம்பாவிதங்கள் நடப்பதற்கு முன் இப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.இரவு நேரங்களில் தேவையற்றவர்களை வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது. பாதுகாப்பை பலப்படுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தை துாய்மையான பகுதியாக பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை