| ADDED : ஏப் 26, 2024 12:56 AM
சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சி நகர் பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் தொடர்ந்து போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டு வருகிறது.சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை, ராமநாதபுரம் சாலை, அருப்புக்கோட்டை சாலை மற்றும் கன்னியாகுமரி சாலையில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். ஒவ்வொரு கடைகளுக்கு முன்பும் கிழக்கு கடற்கரை சாலையின் பிரதான சாலையில் டூவீலர்கள், ஆட்டோ, கனரக வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் தொலைதுாரங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் கனரக லாரிகள் போக்குவரத்து நெரிசலால் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். போக்குவரத்தை சீர் செய்யக்கூடிய போலீசார் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் இந்நிகழ்வு நடக்கிறது.வளர்ந்து வரும் நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப இல்லாமல் ரோடு குறுகிய அளவில் உள்ளது. பாதசாரிகள் நடந்து செல்லும் பாதைகளை முழுவதும் ஆக்கிரமித்துள்ளனர். எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம், கடலாடி வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஒன்றிணைந்து ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றினால் இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.