உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். தி.மு.க., சட்டசபை தேர்தல் வாக்குறுதியின் படி சி.பி.எஸ்., திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற, இறந்த, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிமுகமது, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சத்தியகிரி, சிவகுமார், ஊரக வளர்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் சோமசுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.இதே போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி மதிய உணவு இடைவேளையின் போது அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ