உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விலங்குகளால் பயிர் சேதம்; சோலார் பேனல் ஆக்கிரமிப்பால் ஆபத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

விலங்குகளால் பயிர் சேதம்; சோலார் பேனல் ஆக்கிரமிப்பால் ஆபத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

ராமநாதபுரம்: பரமக்குடி, நயினார்கோவில், கமுதி உள்ளிட்ட இடங்களில் வன விலங்குளால் பயிர் சேதம் அதிகரித்துள்ளது.நீர்நிலையை ஆக்கிரமித்து சோலார்அமைக்கப்படுவதாகவும், உரம் கூடுதல் விலைக்குவிற்பனை செய்வதாகவும் குறைதீர்க்கும் கூட்டத்தில்விவசாயிகள் புகார் தெரிவித்துனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை குறித்து 3 நாட்களுக்குள் நேரடியாக சந்தித்து பதில் தர கலெக்டர் உத்தரவிட்டார்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில்விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.வேளாண் இணை இயக்குனர் (பொ) முருகேசன், கூட்டுறவுசங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜீனு, கலெக்டரின் நேர்முக உதவியார்(விவசாயம்) பாஸ்கரமணியன், தோட்டக்கலை துணை இயக்குனர் ஆறுமுகம்முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:சக்திராஜன், சூரங்கோட்டை: ஆடு, மாடு வாங்க கடன்வழங்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லுாரிமருத்துவமனையில் டாக்டர் இருப்பது இல்லை. மருந்துமாத்திரை சரியாக வழங்குவது இல்லை.கலெக்டர்: விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.கண்ணப்பன், பரமக்குடி: பரளையாறு ஆறுவழித்தடத்தை துார்வார வேண்டும். கருவேல மரங்களைஅகற்ற வேண்டும் என கஜினி முகமது போல தொடர்ந்துமனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கலெக்டர்நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும். மழைமானிகள் அமைக்க வேண்டும்.கலெக்டர்: தண்ணீர் வீணாகாமல் நீர்நிலைகளில் சேமிக்கஉத்தரவிடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையினர் மூலம்உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். மழை மானிகள் வைக்கப்படுகிறது.மைக்கேல், முதுகுளத்துார்: விவசாய நிலங்களில்தாழ்வாக சென்றமின் ஓயர்கள் உடனடியாகஅகற்றினர். கலெக்டருக்கு நன்றி. பண்ணைகுட்டைகளை துார்வார வேண்டும். முத்துசெல்லாபுரத்தில் ரோடு வசதியின்றி மழைக்காலத்தில் 10 கி.மீ., மாணவர்கள் நடந்து செல்கின்றனர்.கலெக்டர்: துரிதமாக செயல்பட்ட மின்வாரியத்திற்குவாழ்த்துக்கள். குறையை மட்டும் சொல்லாமல்இதையும் செய்தி வெளியிடுங்க. ரோடு அமைத்து தரப்படும், ஊருணி, நீர்நிலைகளை துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்.பாஸ்கர பத்மநாபன், பரமக்குடி: வன விலங்குகள் தொந்தரவால் விவசாயம் செய்ய முடியவில்லை. புகார் தெரிவித்தால் வனத்துறையினர் கட்டப்பஞ்சாயத்துசெய்கின்றனர். இழப்பீடு வேண்டாம். நிரந்தர தீர்வுவேண்டும்.பரமக்குடி வனச்சரகர் அன்பரசி: வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து இழப்பீடுதரப்படுகிறது. முழு விளைச்சல் பாதிப்பிற்கு வழங்கஇயலாது.கலெக்டர்: வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாமல்இருக்க வேலி அமைக்கலாம். இப்பிரச்னை தொடர்பாகமாவட்ட வன அலுவலரிடம் பேசி தீர்வு காணப்படும்.முத்துராமலிங்கம், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர், கமுதி: கமுதியை சுற்றியுள்ள இடங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து சோலார் பேனல் அமைக்கின்றனர். வயல்வெளியை விலைக்கு வாங்கி தனியார் நிறுவனத்தினர் சோலார் பேனல் வைக்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால் விவசாயம், அந்த கிராமமே அழிந்து விடும். சோலார் பேனல் அமைக்க அனுமதி தரக்கூடாது.கலெக்டர்: நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். சோலார் பிரச்னை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.பூமிநாதன், வாதவநேரி: கூட்டுறவு சங்கங்களில் பல ஆண்டுகளாக செயலாளர் பணி புரிகின்றனர். அவர்களை இடமாற்றம் செய்ய அரசாணை இருந்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை. இதனால் கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.கலெக்டர்: கூட்டுறவு இணைப்பதிவாளர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்.பாக்கியநாதன், சிக்கல்: சிக்கல் பகுதியில் மழை பாதிப்பு முழு நிவாரணம் வரவில்லை. விடுப்பட்டவர்களுக்கு உடன் இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டுதொகை வழங்க வேண்டும்.குறைகளை கேட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை குறித்து 3 நாட்களுக்குள் தன்னை நேரில் சந்தித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ