உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெரியபட்டினத்தில் சேதமடைந்த ரோடு

பெரியபட்டினத்தில் சேதமடைந்த ரோடு

பெரியபட்டினம் : பெரியபட்டினம் ஊராட்சியில் பிரதானமான காயிதே மில்லத் ரோடு அமைத்து பத்து ஆண்டுகள் ஆகிறது. ரோடு முழுமையாக சேதமடைந்து மண்மேவி மண் ரோடாக மாறியது. இந்த ரோடு வழியாக அரசுப் பள்ளி மற்றும் விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.பெரியபட்டினம் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பிவி கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தார் ரோடு மண் மேவி உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். எனவே 3 கி.மீ.,க்கு புதிய தார் ரோடு அமைக்க திருப்புல்லாணி யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மனு அனுப்பி உள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !