உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கோட்டையில் சேதமடைந்த குடிநீர் தொட்டி: மக்கள் தவிப்பு

கீழக்கோட்டையில் சேதமடைந்த குடிநீர் தொட்டி: மக்கள் தவிப்பு

பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் கீழக்கோட்டை கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் தொட்டி உடைந்த நிலையில் குடிநீருக்கு கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.கீழக்கோட்டை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் முறையாக வருவது கிடையாது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு தொட்டியில் தண்ணீர் நிரப்பி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தொட்டியில் ஒரு பகுதி உடைந்துள்ளதால் தண்ணீரை நிரப்ப முடியாமல் வழிந்து ஓடுகிறது.வெயில் வாட்டி வதைக்கும் சூழலில் தண்ணீர் வீணாவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கீழக்கோட்டை கிராம மக்கள் புகார் தெரிவித்தும்பலன் இல்லை என்கின்றனர். குடம் ரூ.15க்கு வீதம் ஒவ்வொரு வீட்டிலும் 100 ரூபாய் வரை விலை கொடுத்து குடிநீர் வாங்கும் சூழல் உள்ளது. ஆகையால் உடனடியாக தண்ணீர் தொட்டியை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், காவிரி குடிநீர் வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை