உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிறப்பு சான்றில் பெயர் பதிவு செய்ய டிச.  வரை கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்பு சான்றில் பெயர் பதிவு செய்ய டிச.  வரை கால அவகாசம் நீட்டிப்பு

ராமநாதபுரம், : மாவட்டத்தில் 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவு களுக்கு குழந்தையின் பெயரினை பதிவு செய்து பிறப்பு சான்று பெற காலஅவகாசம் டிச.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பெயருடன் பிறப்பை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெறலாம். குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்திருந்தால் 12 மாதங்களுக்குள்பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து இலவசமாக பெயர் பதிவு செய்யலாம். ஓராண்டு முதல் 15 ஆண்டுகளுக்குள் உரிய தாமத கட்டணம் செலுத்தி குழந்தை பெயரை பதிவு செய்யலாம்.ஒரு முறை குழந்தையின் பெயரை பதிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரை அணுகி உறுதிமொழி படிவம் அளித்து பதிவு செய்யலாம்.ஜன.,1 2000-க்கு முன்னர் பதிவு செய்த பிறப்புகளுக்கும், 01.01.2000 முதல் 2009 டிச.,31 வரையிலான பிறப்பு பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழில் குழந்தை பெயரை பதிவு செய்வதற்காக நீட்டிக்கப்பட்ட ஐந்து ஆண்டு கால அவகாசம் வரும் டிச.,31ல் முடிகிறது.குழந்தையின் பெயரினை பதிவு செய்து பிறப்பு சான்று பெற ஊராட்சிகளில் வி.ஏ.ஓ.,வையும், பேரூராட்சியில் துப்பரவு ஆய்வாளர், நகராட்சியில் துப்புரவு ஆய்வாளர், ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பிறந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.மேலும் கால அவகாசம் நீட்டிப்பு வழங்க இயலாது. பிறப்புச் சான்றில் பெயர் பதிவின்றி விடுபட்டவர்கள் பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை