உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசின் நிதி ஒதுக்கீடு தாமதம் நமக்கு நாமே திட்டம் முடக்கம்

அரசின் நிதி ஒதுக்கீடு தாமதம் நமக்கு நாமே திட்டம் முடக்கம்

ராமநாதபுரம்:ஊரக உள்ளாட்சி பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்திற்கு தமிழக அரசு நடப்பாண்டிற்குரிய நிதி வழங்காததால் இதில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முடங்கியுள்ளன.தமிழக அரசின் நமக்கு நாமே திட்டம் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது.பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி அளித்தால், அரசு சார்பில் கூடுதலாக இரு மடங்கு நிதி வழங்கப்படுகிறது.மக்கள் பரிந்துரைக்கும்திட்டங்களான ரோடு பணி, பள்ளியில் கழிப்பறை, காம்பவுண்ட் சுவர் கட்டுதல், நீர்நிலைகளை சீரமைத்தல், செயற்கை நீரூற்றுகள், தெரு விளக்குகள் அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், மரக்கன்று நடுதல், மழைநீர் வடிகால், தெருக்களுக்கு பெயர்ப்பலகைகள் வைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.கடந்த 2023--24ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மக்களுக்கு தேவையான கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் 'நமக்கு நாமே' திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதியை அரசு விடுவித்தது. 2024-25ம் ஆண்டிற்கு ரூ.100 கோடி வழங்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.ஆனால் இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. இதனால் இத்திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முடங்கியுள்ளன. ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில் ' மாவட்டங்களில் நமக்கு நாமே திட்டத்தில் 2024-25ம் ஆண்டில் மக்கள் பரிந்துரைத்துள்ள திட்டங்கள், பங்களிப்பு தொகை விபரங்கள் குறித்து அறிக்கையை சென்னைக்குஅனுப்பியுள்ளோம். அவற்றை பரிசீலனை செய்து அரசின் பங்களிப்பு நிதி விரைவில் விடுக்கப்பட உள்ளது. அதன் பிறகு பணிகள் துவங்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை