மேலும் செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் குடிநீர் வினியோகம் பாதிப்பு
13-Aug-2024
-சாயல்குடியில் அதிக உறிஞ்சும் திறன் கொண்ட மின் மோட்டாரை பயன்படுத்தி சட்ட விரோதமாக குடிநீரை எடுக்கின்றனர். இதனால் பிற பகுதிகளுக்கு குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.பேரூராட்சியில் 1 முதல் 15 வார்டுகள் உள்ள நிலையில் இங்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர்.சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் மூலம் தண்ணீர் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. வீடுகளில் உள்ள குழாய்களுக்கு தண்ணீர் முறையாக விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில் சிலர் சட்டவிரோதமாக குடிநீரை அதிக உறிஞ்சும் திறன் கொண்ட மின் மோட்டாரை பயன்படுத்தி எடுக்கின்றனர். இதனால் பிற பகுதிகளுக்கு குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.சாயல்குடி பொதுமக்கள் கூறியதாவது: சாயல்குடியில் வீடுகள் தோறும் அதிக திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தியவர்களை கண்காணித்து மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும். பேரூராட்சி நிர்வாகம் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
13-Aug-2024