உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின்தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மின்தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அடிக்கடி ஏற்படும் மின் தடையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் டி.வி., பேன், உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்தது. மேலும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் துாங்கவும், பொழுது போக்கவும் முடியாமல் அவதிப்பட்டனர்.இந்த அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுத்தும் தமிழக அரசை கண்டித்து நேற்று ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் அருகில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மின் தடையில் பழுதான டி.வி.,யை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.கட்சியின் ராமேஸ்வரம் தாலுகா செயலாளர்சிவா, நிர்வாகிகள் கருணாகரன், அசோக், மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை