தொண்டி அருகே டெட்டனேட்டர்கள் பறிமுதல்
திருவாடானை:புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மலை பகுதியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதிக்கு ஜெலட்டின் குச்சிகள் கடத்தி வரப்படுகிறது. கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பதற்காக இச்செயலில் ஒரு கும்பல் ஈடுபடுகிறது. நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, டூ - வீலரில் வந்த இருவரிடம் போலீசார் மறித்த போது, டூ-வீலரை போட்டு தப்பினர். சிதறிக் கிடந்த 400 ஜெலட்டின்கள், 400 டெட்டனேட்டர்கள், 2 கிலோ ஒயர், மொபைல் போனை கைப்பற்றினர்.அந்த வாகனம், தொண்டியைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.