உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கலெக்டர் அலுவலகத்தில் வீல்சேர் வசதி சாய்தளமின்றி மாற்றுத்திறனாளிகள் அவதி

கலெக்டர் அலுவலகத்தில் வீல்சேர் வசதி சாய்தளமின்றி மாற்றுத்திறனாளிகள் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வீல்சேர் மற்றும் சாய்தள வசதி இல்லாததால் பல்வேறு பணிகளுக்காக வரும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர்.பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதிநகரில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு பல்வேறு மனுக்கள் அளிக்கவும், நலத்திட்ட உதவிகள் தொடர்பாக கலெக்டரை சந்திக்க மாற்றுத்திறனாளிகள் வருகின்றனர். தற்போது லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில்உள்ளதால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் மக்கள் மனுக்களை போடுகின்றனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வீல்சேர், சாய்வு தளம் வசதி இல்லததால் அவர்கள் படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மே 6ல் திங்களன்று பரமக்குடியை சேர்ந்த இருகால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி சசிகுமார் படிகட்டு ஏறி, இறங்குவதற்கு சிரமப்பட்டார்.எனவே இக்குறையை நிவர்த்தி செய்வதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை