| ADDED : ஜூலை 18, 2024 04:35 AM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் சரஸ்வதி துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, பேக், நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.ராமேஸ்வரம் ஜெ.ஜெ., நகரில் உள்ள அரசு உதவி பெறும் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் 70 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு இலவச வேன், படிக்கும் போது இருக்கை வசதியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு தாளாளர் சீதாராம் தாஸ் பாபா தலைமை வகித்தார்.நகராட்சி தலைவர் நாசர்கான், பா.ஜ., மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் வாழ்த்தி பேசினார்கள். பின் மாணவர்களுக்கு இலவச சீருடை, பேக், நோட்புக், விளையாட்டு பொருள்கள் வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர்கள் கோபால் தாஸ் கால்ரோ, லலித்பாய், நகராட்சி கவுன்சிலர்கள் முகேஷ், பிரபு, ஆசிரியர் ஜெயகாந்தன், சுடலை, முருகன், ராமு, முனியசாமி பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் மாலாசங்கரி நன்றி கூறினார்.