உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பிரிவுபசார விழா 

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பிரிவுபசார விழா 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய மாணவர்களுக்கு பிரிவுபசார விழா நடந்தது.ராமநாதபுரத்தில் உள்ள கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2023-24ல் 128 மாணவிகள் உட்பட 256 பேர் பயின்றனர். இவர்களுக்கான பிரிவுபசார விழா நடந்தது.மேலாண்மை நிலைய முதல்வர் ரகுபதி தலைமை வகித்து பேசுகையில், எல்லோராலும் எதையும் சாதிக்க முடியும். கூட்டுறவுத்துறை உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்று அரசுப் பணிகளுக்குச் செல்ல வேண்டும் என்றார். விரிவுரையாளர்கள் தங்கமணி, சேது, பொற்செல்வம், மனோஜ் பிரகாஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாணவி ஷெர்லின் ஷீலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ