உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரையில் நாய்கள் தொல்லை

கீழக்கரையில் நாய்கள் தொல்லை

கீழக்கரை : கீழக்கரை நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்களை வெறி நாய்கள் விரட்டி கடிக்கின்றன. கடிபட்ட மக்கள் கீழக்கரை மற்றும் ராமநாதபுரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.கீழக்கரையை சேர்ந்த மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் முஹைதீன் இப்ராஹிம் கூறியதாவது: கீழக்கரை நகர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் 2800 க்கும் அதிகமான மக்களை நாய்கள் கடித்துள்ளன. இவர்கள் மருத்துவமனைகளில் உள் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வெறி நாய்களை அகற்றக் கோரி கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அனுப்பி உள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை