உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உச்சிப்புளி அருகே தாமரைக்குளத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் 

உச்சிப்புளி அருகே தாமரைக்குளத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் உச்சிப்புளி அருகே தாமரைக்குளம் பகுதியில் ரோட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீர் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நெடுஞ்சாலைத்துறை ரோடு சேதமடைந்து வருகிறது. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஊராட்சிகள், நகராட்சிப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மண்டபம் ஒன்றியம், ராமேஸ்வரம் நகராட்சிக்கு செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் தாமரைக்குளம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு மூன்று நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடி நீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரோட்டில் ஓடும் காவிரி நீரால் நெடுஞ்சலைத்துறை ரோடு முற்றிலும் சேதமடைந்துள்ளது.இரவு நேரங்களில் டூவீலர்களில் வருபவர்கள் இந்த பள்ளத்தில் விழுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.காவிரி குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறுகையில், நேற்று (ஜூன் 12) மதியம் 12:00 மணிக்கு குழாய் உடைப்பு சரி செய்ய பணியாளர்கள் சென்றனர். குழாய் உடைப்பு சரி செய்ய முடியாத நிலையில் திரும்பிவிட்டனர். இன்று மீண்டும் பணியாளர்கள் உரிய உபகரணங்களுடன் சென்று குாழாய் உடைப்பினை சரிசெய்யப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ