உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் வசதி இல்லாததால் மக்கள் சிரமம்

பஸ் வசதி இல்லாததால் மக்கள் சிரமம்

கமுதி: கமுதி அருகே வ.மூலக்கரைப்பட்டி, கோடாங்கிபட்டி, பெருமாள் தேவன்பட்டி, இடைச்சூரணி, அம்மன்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமங்களில் உள்ள மாணவர்கள் பள்ளி, கல்லுாரிக்கு கமுதி செல்கின்றனர். மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. பின் பஸ் இடைச்சூரணி, பெருமாள் தேவன்பட்டி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வ.மூலக்கரைப்பட்டி, வடுகப்பட்டி, அம்மன்பட்டி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கும், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் கூடுதல் பணம் செலவு செய்து சரக்கு வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் செல்கின்றனர்​. தினந்தோறும் கூடுதல் பணம் செலவழிப்பதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மீண்டும் பெருமாள் தேவன்பட்டி வரை செல்லும் அரசு பஸ்சை கோடாங்கிபட்டி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை