உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எமனேஸ்வரம் வரதராஜபெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவம்: மே 12ல் கொடியேற்றம்

எமனேஸ்வரம் வரதராஜபெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவம்: மே 12ல் கொடியேற்றம்

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான பெருந்தேவி, வரதராஜபெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவையொட்டி மே 11 இரவு 9:00 மணிக்கு அனுக்ஞை, காப்பு கட்டுதல் நடக்கிறது.மே 12 காலை 9:30 மணிக்கு கோயில் கொடி மரத்தில் கருட கொடி ஏற்றப்படும். இரவு பெருமாள் அன்ன வாகனத்தில் ஏகாந்த சேவையில் வீதி உலா வருகிறார். தினமும் காலை பல்லக்கிலும், மாலை சிம்ம, சேஷ, கருட, அனுமன், யானை வாகனங்களில் வீதி உலா வருகிறார். மே18 காலை 11:00 மணி முதல் 12:00 மணிக்குள் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு பூ பல்லக்கில் வீதி வலம் நடக்க உள்ளது.மே 19 மாலையில் வெண்ணெய்த்தாழி நவநீத கிருஷ்ணன் சேவையும், மறுநாள் காலை 6:00 மணிக்கு குதிரை வாகனத்தில் திருமங்கையாழ்வார் வேடு பரியாகம் நடக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு தேரோட்டம், மறுநாள் தீர்த்தவாரி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை