உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் டிப்போ அருகே ஆக்கிரமிப்பு; தொடரும் போக்குவரத்து நெரிசல்

பஸ் டிப்போ அருகே ஆக்கிரமிப்பு; தொடரும் போக்குவரத்து நெரிசல்

பரமக்குடி : பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை குறுகிய ரோட்டில் உள்ளது. இப்பகுதியில் ஆக்கிரமிப்பதால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியாமல் உள்ளது.மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஸ்டாண்ட் அடுத்த ரோட்டில் அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. இப்பகுதியில் வாரச்சந்தை செயல்படுகிறது.இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் மினி பஸ் ஸ்டாப் மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட் உட்பட நெடுஞ்சாலையின் இரண்டு ஓரங்களிலும் வாகனங்களை நிறுத்தும்படி உள்ளது. தினமும் ரோட்டில் கனரக வாகனம் முதல் டூவீலர் வரை நெரிசலில் சிக்கி தவிக்கிறது.பணிமனைக்குள் பஸ்கள் சென்று வரும் போது நெரிசல் ஏற்படுகிறது. கடந்த மாதம் சப் கலெக்டர் அபிலாஷா கவுர் அதிகாரிகளுடன் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்தார். ஜூன் மாதத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த சூழலில், பரமக்குடி நகரின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்தை சீர் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ