உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்

சாயல்குடி: சாயல்குடி அருகே மூக்கையூர் ஊராட்சி கன்னிகாபுரி குழந்தை உரிமைகளும், நீங்களும் அமைப்பு மற்றும் ரூரல் ஒர்க்கர்ஸ் டெவலப்மென்ட் சொசைட்டி நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.கன்னிகாபுரி சிறுவர் மன்ற தலைவர் முனீஸ் பிரியா வரவேற்றார்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஓவியம் வரைந்தும், சுற்றுச்சூழல் மாசுபாடுகள் குறித்த குடும்பம் மூலமாக நடித்தும் காண்பிக்கப்பட்டது. மரக்கன்றுகள் நடுவதால் எவ்வாறு சுற்றுச்சூழல் பாதுகாப்பது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.சிறுவர் மன்ற உறுப்பினர் ஜெபமாலை தங்கம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நிறுவனத்தின் பணியாளர் சத்யா செய்திருந்தார்.*திருப்புல்லாணி அருகே தில்லையேந்தல் ஊராட்சி பள்ளமோர்க்குளம் கிராமத்தில் உள்ள வையக் கிழவன் ஊருணி கரையோரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. திருப்புல்லாணி வட்டார கண்மாய் வயலகங்களின் கூட்டமைப்பு மற்றும் வயலக ஜீவிதம், தானம் அறக்கட்டளை சார்பில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டது.பணியாளர்கள் மற்றும்அலுவலர்கள் கலந்து கொண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் நன்மைகள் குறித்து கிராம மக்களுக்கு விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை